Close

Postgraduate Diploma in Education 2024-2026

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை

கலைப்பீடம்

பட்டப்பின் கல்வியியல் தகைமைச் சான்றிதழ் (டிப்ளோமா)

பகுதிநேர ஈராண்டுக் கற்கைநெறி- (2024-2026)

புதிய அனுமதி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் மேற்படி கற்கைநெறிக்கான விண்ணப்பங்கள் அரசாங்கப் பாடசாலைகளில் கடமையாற்றும் பட்டதாரி ஆசிரியர்களிடமிருந்தும் கல்வி நிர்வாகிகளிடமிருந்தும் கோரப்படுகின்றன. விண்ணப்பதாரிகள் 18.10.2024 அன்று 50 வயதுக்கு குறைந்தவர்களாக இருத்தல் வேண்டும்.

மேற்படி கற்கைநெறிக்கான விண்ணப்பப் படிவங்களை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இணையத்தளத்திலிருந்தோ அல்லது கலைப்பீட இணையத்தளத்திலிருந்தோ (www.arts.jfn.ac.lk) தரவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பப் படிவங்கள் யாவும் தத்தம் திணைக்கள தலைவர் ஊடாகவோ அல்லது பாடசாலை அதிபர் ஊடாகவோ அனுப்பப்பட வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களுடன் மக்கள் வங்கிக்கிளையில் கணக்கிலக்கம் 040022240000980 க்கு ரூ.1,500/- செலுத்திய பற்றுச்சீட்டை இணைத்து பிரதிப்பதிவாளர், கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம் எனும் முகவரிக்கு பதிவுத்தபாலில் 18.10.2024 திகதிக்கு முன்னர் அனுப்புதல் வேண்டும்.

இக்கற்கைநெறிக்கான கட்டணம் ரூ. 85,000/-.

விண்ணப்பப் படிவம் தரவிறக்க

எழுத்துத் தேர்வு (பொது விவேகம் மற்றும் கல்வியியல் பொதுத்தகைமை ஆகிய பாடங்கள்) மற்றும் நேர்முகத் தேர்வு இரண்டினதும் பெறுபேறுகளுக்கமைய தெரிவுகள் இடம்பெறும்.

கற்கைநெறிக்குத் தெரிவுசெய்யப்படும் விண்ணப்பதாரிகள் பல்கலைக் கழகத்திலிருந்து 25 மைல் சுற்றாடலுக்குள் அமைந்துள்ள பாடசாலைக்கு இடமாற்றம் பெறுவதோடு இக்கற்கைநெறிக்குப் பதிவுசெய்யும்போது மேற்குறிப்பிட்ட இடமாற்றக் கடிதத்தைச் சமர்ப்பித்தலும் வேண்டும்.

விண்ணப்ப முடிவு திகதிக்குப் பின்னர் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்களும், பல்கலைக்கழகத்தினால் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப்படிவத்தில் பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்களும், பணம் செலுத்திய பற்றுச்சீட்டை இணைத்து அனுப்பப்பெறாத விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

பதிவாளர்
19.09.2024

Share The Knowledge

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave a comment

You cannot copy content of this page